அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பை உயர்த்தியதற்கு எதிராக இளைஞர் பெருமன்றம் ஆர்பாட்டம்!

Share on

தஞ்சாவூர்: அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் தஞ்சாவூர் கீழராஜவீதியில் உள்ள ஏஐடியூசி தொழிற்சங்க அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பொறியாளர் இரா.முகில் தலைமை வகித்தார்.

மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மருத்துவர்.ச.சுதந்திரபாரதி,ச.இலங்கேஸ்வரன்,டி.சங்கர்,சி.செந்தூர்நாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்பாட்டம் செய்தனர்.

அதே கோரிக்கைகளை முன்வைத்து,கும்பகோணம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஏஐடியூசி தொழிற்சங்க அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் வக்கீல்.சு.துர்காதேவி தலைமை வகித்தார்.

மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மு.மணிகண்டன், டி.கே.கோபி, ஏ.லெனின், என்.பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து ஆர்பாட்டம் செய்தனர்.

பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலக அலுவலகத்திற்க்கு எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்க்கு, மாவட்ட துணை செயலாளர் பூபேஸ்குப்தா தலைமை தாங்கினார்.

நிர்வாகிகள் கோ.சக்திவேல்,கவியரசன்,விஜயன்,
சுகோ,கபில்தேவ்,லெனின் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து ஆர்பாட்டம் செய்தனர்.

சிக்கன நடவடிக்கை என்று சொல்லி அனைத்து அரசுத் துறைகளிலும் புதிய பதவிகளை உருவாக்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவை உடனே திரும்பப்பெற வேண்டும்.

இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது வரம்பு 58லிருந்து 59 ஆக உயர்த்திய அரசாணையை உடனே ரத்து செய்ய வேண்டும்,

கொரோனா ஊரடங்கு முடிந்த பின்பு இரண்டு வாரம் சிறப்பு வகுப்புகள் நடத்திய பின்னர் தான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்திட வேண்டும்.

கொரோனா நோய் தொற்றை பரப்பும் அபாயம் உள்ள டாஸ்மார்க் மதுபான கடைகளை உடனே மூடவேண்டும்.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10,000/- நிவாரணமாக வழங்க வேண்டும்.

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல குடிநீர், உணவு வழங்கி, கட்டணமின்றி, ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தஞ்சாவூர் மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள

Whatsapp Link– https://chat.whatsapp.com/H5EtQ8RdkDR6rDO9MCwfy3

Facebook Link – https://www.facebook.com/groups/ThanjavurNews/


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *