ஓய்வு பெறுகிறார் மகளிர் கிரிக்கெட்டின் சச்சின் மிதாலி ராஜ்

இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மிதாலி ராஜ் சர்வதேச டி20 தொடரில் இருந்து ஓய்வினை அறிவிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தற்போது இந்திய மகளிர் அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை கைப்பற்றிய நிலையில் இன்று டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த டி20 போட்டியில் மிதாலிக்கு இடமில்லாமல் அவருக்கு பதிலாக புதிதாக ஒரு வீராங்கனை இறக்கப்பட்டார். இந்நிலையில் 2020ஆம் ஆண்டு உலகக்கோப்பையை கருத்தில் கொண்டும், 36 வயதான மிதாலிராஜ் ஓய்வினை அறிவிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாட உள்ளது . இந்த தொடருடன் ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *