வாட்ஸ் ஆப்: பாதுகாப்பாக பயன்படுத்துங்கள்!

Share on

அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜெப் பெசோஸின் ஸ்மார்ட்போன், வாட்ஸ்ஆப் மூலமாக முடக்கப்பட்ட செய்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்மார்ட் போன்களில் சேமிக்கப்படும் தகவல்கள் பாதுகாப்பானவை அல்ல என்பதை இந்தச் சம்பவம் மறுபடியும் வெளிப்படுத்தியுள்ளது.

பிரபலங்களின் ஸ்மார்ட்போன்கள் தான் முடக்கப்படும் என்று அசட்டையாக இருக்க வேண்டாம். உலகில் எந்தப் பகுதியில் இருந்தும் இணையதளத்தைப் பயன்படுத்தும் எந்த ஒரு ஸ்மார்ட் போனையும் நொடிப்பொழுதில் முடக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆகையால், வாட்ஸ் ஆப் தகவல்களை நாம் எப்படி மேலும் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது.


 வாட்ஸ் ஆப்பில் உள்ள “பிரைவசி செட்டிங்ஸ்’ உள்ளே சென்று “மை காண்டக்ட்ஸ்’ என மாற்றம் செய்ய வேண்டும். இதன் மூலம் உங்கள் ஸ்மார்ட் போனில் பதிவு செய்யப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் உள்ளவர்கள் மட்டுமே உங்களது புரபைல் போட்டோ, ஸ்டேடஸ் ஆகியவற்றைப் பார்க்க இயலும்.


 இதேபோல் செட்டிங்சில் – “அக்கவுண்ட் – டூ ஸ்டெப் வெரிபிகேஷன்’ உள்ளே சென்று 6 இலக்க எண்ணையும், இ-மெயிலையும் பதிவு செய்து கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உங்கள் வாட்ஸ் ஆப் கணக்கை வேறு யாராவது உங்கள் ஓடிபியைத் தெரிந்து கொண்டு உள்ளே ஊடுருவ முயன்றாலும், இந்த 6 இலக்க எண்ணை அவர்களால் பதிவு செய்ய இயலாது. இந்த 6 இலக்க எண்ணை யாருடன் பகிரவும் கூடாது.


 இதேபோல், வாட்ஸ் ஆப்பிற்குள்ளே நுழைய விரல் ரேகைப் பதிவைச் செயல்படுத்துவதும் பாதுகாப்பை தரும். இதற்காக “செட்டிங்சில் – பிரைவசி- ஸ்கிரீன் லாக்’ செயல்படுத்தி விட்டால்போதும். உங்கள் விரல் ரேகை பதிவு இல்லாமல் வாட்ஸ் ஆப்பில் உள்ளே நுழையவே முடியாது.


 இதேபோல், உங்கள் வாட்ஸ்ஆப் சாட்கள் “என்ட்-டு-என்ட் என்கிரப்டைட்’- ஆக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதாவது, நீங்கள் அனுப்பும் தகவல் உரியவருக்கு மட்டுமே சென்றடைகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதற்கு அந்த சாட்டிற்குள் சென்று “என்கிரப்ஸன்’ கிளிக் செய்து உறுதி செய்யலாம். இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் நமது வாட்ஸ்ஆப் தகவல்களை ஓரளவுக்குப் பாதுகாப்பாக அனுப்ப முடியும்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *