அஜித் நடிப்பில் விஸ்வாசம் படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், படத்தில் அஜித்தின் என்ட்ரி எப்படி இருக்கும் என்பது பற்றி டி.இமான் கூறினார்

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் – சிவா இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 
இதற்கிடையே இயக்குநர் சிவா, டி.இமான் மாலைமலருக்கு அளித்த பேட்டி:
படத்தில் தலயோட என்ட்ரி எப்படி இருக்கும்?
உடனடியாக டி.இமான் செம மாஸாக இருக்கும் என்றார். சிவா கூறும்போது, பல காட்சிகள் அஜித் சாரின் முதல் காட்சி போல் இருக்கும். அனைவருக்கும் பிடிக்கும்படியாக இருக்கும். மானிட்டரில் காட்சிகளை பார்க்கும் போது அனைவரும் கம்பீரம், பிரமிப்பு, மாஸாக உணர்வார்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *