தஞ்சை அருகே மருங்குளத்தில் கொரனா அச்சத்தால் 15 நாட்களுக்கு கடைகளை மூடிய கிராம மக்கள்!

Share on

தஞ்சாவூர் அருகே மருங்குளம் 4 ரோடு சந்திப்பில் சுமார் 100 கடைகள் உள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த 20 கிராமங்களுக்கு மையமாக உள்ள மருங் குளத்தில் தான் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஒருவருக்கு கொரனா தொற்று ஏற்பட்டதையடுத்து ஒட்டுமொத்தமாக அனைத்து கடைகளையும் மூடி முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் நேற்றுமுதல் ஈடுபட்டுள்ளனர். மேலும் மருங்குளம் 4 ரோட்டுக்கு அருகில் உள்ள கிராம மக்கள் யாரும் பொருட்கள் வாங்க வரவேண்டாம் எனவும் ஆட்டோக்கள் மூலம் விளம்பரம் செய்துள்ளனர் . பெட்ரோல் பங்க், மருந்து கடை, டாஸ்மாக் கடை மட்டுமே தற்போது இயங்கி வருகிறது, டாஸ்மாக் கடைக்கு வரும் மது அருந்துவதால் தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளதாக கருதி டாஸ்மாக் கடையையும் 15 தினங்களுக்கு மூட வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு மருங்குளம் கிராம மக்கள் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளார்

தஞ்சாவூர் மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள

Whatsapp Link- https://chat.whatsapp.com/H5EtQ8RdkDR6rDO9MCwfy3

Facebook Link – https://www.https://www.facebook.com/groups/ThanjavurNews/ facebook.com/groups/ThanjavurNews/

MrChe #மிஸ்டர்சே


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *