மூன்றாவது முறையாக மீண்டும் இணையும் விஜய் – அட்லீ

சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படத்தை அட்லீ இயக்க போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லீ  இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.  ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ ஆகிய வெற்றி திரைப்படங்களை தொடர்ந்து மீண்டும் விஜய் – அட்லீ கூட்டணி இணைந்துள்ளது .

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும், ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணுவும் பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். சண்டை வடிவமைப்பாளராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக், எடிட்டராக ரூபன், கலை இயக்குநராக முத்துராஜ் ஆகியோர்  பணிபுரியவுள்ளார்கள் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதே கூட்டணி தான் மெர்சல் படத்திலும் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு  தீபாவளிக்குப் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *