வட்ட அளவிலான சதுரங்க போட்டியில் வாணியம்பாடி அர்-ரஹ்மான் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் சாதனை.

வட்ட அளவிலான சதுரங்க போட்டியில் வாணியம்பாடி அர்-ரஹ்மான் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் சாதனை.

வாணியம்பாடி ஆக 21 : வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அர்-ரஹ்மான் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் வட்ட அளவிலான சதுரங்க போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.

வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன்பேட்டை அரசு உயர் நிலைப்பள்ளியில் வாணியம்பாடி வட்ட அளவிலான பதினான்கு வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான சதுரங்க போட்டி நடந்தது. இதில் அர்-ரஹ்மான் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் எம்.முஹம்மத் அர்ஃபான் முதல் இடத்தையும், சி.முஹம்மத் ஹாஷிம் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் வேலூர் முனீர் அஹமத், பள்ளி முதல்வர் பிங்கி ரூஹித், உடற்கல்வி ஆசிரியர் கிஷோர் மற்றும் பள்ளி ஆசிரியைகள் பாராட்டினர்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *