Vadivelu daughter marriage

என்னாது! வடிவேலுவின் மகளுக்கு கல்யாணமா? சொல்லவே இல்ல!

நடிகர் வடிவேலுவின் இளைய மகள் திருமணம் மதுரையில் இன்று எளிமையான முறையில் நடைபெற்றது.

சோகத்தில் இருப்பவர்களையும் ஒருவரால் சிரிக்க வைக்க முடியும் என்றால், அது நம்ம வடிவேலு தான். சிறியவர் முதல் பெரியவர் என அனைவரின் மகிழ்ச்சிக்கும் முக்கிய காரணமாகவும் திகழ்பவர் வடிவேலு. திரைப்படத்தில் மட்டுமல்ல, சமூக வலைதளங்களில் வரும் மீம்ஸ்களில் முக்கிய ஹீரோ நம்ம வடிலேலு தான். அப்பேற்பட்ட ஒரு நடிகரின் மகளுக்கு திருமணம் இன்று நடைபெற்றுள்ளது.

சதாரண வீட்டில் நடக்கும் திருமணங்களுக்கே பேனர்கள், பட்டாசுகள் என அனல் பறக்கும் அளவிற்கு கொண்டாட்டம் இருக்கும். ஆனால், இவ்வளவு பெரிய நடிகரின் வீட்டுத் திருமணம் ரொம்ப சிம்பிளா முடிச்சுருக்காங்க. ஆமா, வடிவேலு தனது சொந்த ஊரான மதுரையில், எந்தவித ஆடம்பர ஏற்பாடுகளும் விளம்பரமும் இன்றி, தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்.

மதுரை ஐராவதநல்லூரில் உள்ள என்.எஸ்.சந்திர அம்மாள் திருமண மண்டபத்தில், வடிவேலுவின் மகள் கலைவாணிக்கும், ராமலிங்கம் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவிற்கு திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவிலையாம்.

முன்னதாக வடிவேலுவின் மூத்த மகன் சுப்பிரமணியனுக்கு கடந்த 2014-ம் ஆண்டு இதேபால தான் திருமணம் சிம்பிளா நடந்தது. மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்ற திருமணத்திற்கு, திரை பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *