மதுரை கல்பாலத்தில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலத்தை தாண்டி தண்ணீர் செல்வதால், அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது!

Share on

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் கனமழை காரணமாக வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் தற்பொது கல்பாலத்தை கடந்து செல்கிறது. இந்தநிலையில், கல்பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்வதால், அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரு கரையிலும் தடுப்புகளை ஏற்படுத்தி, வாகனங்கள் செல்லாமல் தடுத்து வருகின்றனர். ஒலிப்பெருக்கி மூலமும் போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *