அடுத்த ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி. தேர்வு விவரம் குறித்த பட்டியல் வெளியீடு!!

Share on

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் அரசு பணிகளுக்கான அறிவிப்பு பட்டியலை வெளியிடும். அந்த வகையில் அடுத்த ஆண்டுக்கான (2020) வருடாந்திர பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

சென்னை,

ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நடை பெறும் பல்வேறு பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு எப்போது வெளியிடப்படும்? என்ற தகவல் அதில் கூறப்பட்டுள்ளது.

குரூப்-1 பதவிகளுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு (2020) ஜனவரி மாதத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாற்றங்கள் கொண்டு வரப்பட்ட குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பதவிகளுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியாகிறது.

மேலும், குரூப்-3, குரூப்-6, குரூப்-7ஏ, குரூப்-7பி, குரூப்-8 பதவிகளில் அடங்கிய காலி இடங்களுக்கான அறிவிப்பும் எந்த மாதத்தில் வெளியாகும்? என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் பேர் விண்ணப்பிக்கும் குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.

இதுதவிர வேளாண்துறை அலுவலர், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மற்றும் அலுவலர், என்ஜினீயரிங் பணிகள் உள்பட 23 பிரிவுகளுக்கான அறிவிப்புகள் அதில் கூறப்பட்டு இருக்கிறது.

அந்தந்த மாதத்தில் சம்பந்தப்பட்ட பதவிகளில் எவ்வளவு காலி இடங்கள் இருக்கின்றனவோ, அதன் அடிப்படையில் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியாகும்.

கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *