கிணற்றில் தவறி விழுந்த புலி!

Share on

மத்தியப் பிரதேச்சத்தில் உள்ள கட்னி நகரில் கிணற்றில் புலி ஒன்று தவறி விழுந்த சம்பவம் நடந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து வனவிலங்கு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து புலியை மீட்கும் பணியில் இறங்கியுள்ளனர்.

இதுகுறித்து வனவிலங்கு அதிகாரி ஒருவர் கூறும்போது, “ இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கிணறு ஒன்றில் புலி ஒன்று சிக்கியுள்ளதாக எங்களுக்குத் தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து நாங்கள் அங்கு விரைந்தோம். பதற்றத்தைக் குறைக்க அப்பகுதியிலிருந்த பொதுமக்களை முதலில் வெளியேறுமாறு கூறினோம். புலியை கிணற்றிலிருந்து வெளியே கொண்டு வந்த பிறகுதான் அந்தப் புலி எப்போது கிணற்றில் விழுந்தது, எதற்கு இப்பகுதிக்கு வந்தது என்று தெரியும்.

புலியை முதலில் வெளியே கொண்டுவந்த பிறகு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். புலி ஆரோக்கியமாக இருந்தால் அதன் அம்மாவிடம் ஒப்படைக்கப்படும். இல்லையேல் தொடர்ந்து அதற்கு சிகிச்சை அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து புலியை மீட்கும் பணி நடந்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புலி, யானை, மான் போன்ற வனவிலங்குகள் காடுகளில் நிலவும் வறட்சி காரணமாக தண்ணீர் தேடி ஊர்ப்பகுதிகளுக்கும், நகரங்களுக்கும் நுழைவது சமீபத்தில் அதிகரித்து வருகிறது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *