காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே போலீசார் வாகன சோதனையின்போது பைக்கில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு கஞ்சா கடத்திவந்த மூன்று வாலிபர் கைது!

Share on

#உத்திரமேரூர் – காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே போலீசார் வாகன சோதனையின்போது பைக்கில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு கஞ்சா கடத்திவந்த மூன்று வாலிபர்களை போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து இரண்டுகிலோ கஞ்சா மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல்செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் அதிக அளவில் கஞ்சா புழக்கம் இருப்பதாக உத்திரமேரூர் காவல்துறையினருக்கு தொடர்ந்து தகவல் வந்தது அதனையடுத்து புதிதாகா உத்திரமேரூர் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட விநாயகம் ரோந்து, மற்றும் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தினர்.
இந்தநிலையில் உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் விநாயகத்தின் உத்தரவின்பேரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன் உத்திரமேரூர் அடுத்துள்ள கட்டியாம்பந்தல் பகுதியில் வாகனத்தனிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார் அப்போது பத்திரிக்கையாளர்கள் தங்களது வாகனங்களில் ஒட்டிக்கொள்ளும் பிரஸ் ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த மூன்று இளைஞர்களை மடக்கி விசாரணை மேற்கொண்டார், அப்போது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.

இதனால் அவர்கள்மீது சந்தேகமடைந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன் மோட்டார்சைக்கிளை ஆய்வுசெய்தபோது அதில் இரண்டுகிலோ கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. உடன் மூன்றுபேரையும் உத்திரமேரூர் காவல்நிலையத்திற்கு கொண்டுவந்து போலீசார் விசாரனைமேற்க்கொண்டு கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் கஞ்சாவை கடத்திவந்தவர்கள் உத்திரமேரூர் காஞ்சிபுரம் சாலையில் பால் டெப்போ எதிரே வசிக்கும் லோகப்பிரகாஷ் என்பவரது மகன் ஜெகன் 19, உத்திரமேரூர் அடுத்துள்ள நெல்வாய் கிராமத்தைசேர்ந்த ஏழுமலை என்பவரது மகன் ரமேஷ் 22, சென்னை என்.எஸ்.கே நகரைசேர்ந்த ரவி 26, என்பவரது மகன் கார்த்தி என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மூவர் மீதும் உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் விநாயகம் உத்தரவின்பேரில் காவல் உதவி ஆய்வாளர் முரளிதரன் வழக்குப்பதிவுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பத்திரிக்கையாளர்கள் போன்று பிரஸ் ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு வாலிபர்கள் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் உத்திரமேரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *