தஞ்சாவூர் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கள்ளப்பெரம்பூர் செங்கழுநீர் ஏரியில் சிறப்பு குடிமராமத்து திட்டத்தின் மூலம் தூர்வாரும் பணி தொடங்கியது!

Share on

மாமன்னன் ராஜராஜசோழன் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்டது. ஏறத்தாழ 640 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி மூலம் 2,662 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. ஆனந்த காவேரி வாய்க்காலில் இருந்து கச்சமங்கலம் அணையின் மேல் பகுதியில் பிரிந்து 19 கி.மீ. கடந்து செங்கழுநீர் ஏரியில் தண்ணீர் கலக்கிறது. இதன் நீர் சேமிப்பு 41.82 மில்லியன் கன அடி. அதாவது அரை டிஎம்சி
இதன் மூலம், கள்ளப்பெரம்பூர், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், சீராளூர், சக்கரசாமந்தம், வடகால், ராயந்தூர், குணமங்கலம், சித்தாயல், சித்திரக்குடி உள்ளிட்ட கிராமங்கள் பயனடைந்து வருகின்றன. மேலும், இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பி இருக்கும்போது பல கிராமங்களுக்கும், தஞ்சாவூர் மாநகருக்கும் நிலத்தடி நீர் உயருவதற்கும் வாய்ப்பாக அமைகிறது.


எட்டு மதகுகள் கொண்ட இந்த ஏரியில் கிழக்கு, வடக்குப் புறத்தில் மட்டும் கரை உள்ளது. ஆனால், பராமரிப்பின்மைக் காரணமாக இந்த ஏரி முழுவதும் காட்டாமணக்கு, காட்டுக் கருவைச்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால், இந்த ஏரியில் நீர் பிடிப்புப் பரப்பும் குறைந்தது.
இந்த ஏரியைத் தூர் வார வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். இதனிடையே, இந்த ஏரியைத் தூர் வாருவது என கள்ளப்பெரம்பூர் செங்கழுநீர் ஏரி பாசனதாரர் சங்கத்தினர் முடிவு செய்தனர். வெளிநாட்டில் வாழும் இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோரின் நிதியுதவியின் மூலம் திரட்டப்பட்ட ஏறத்தாழ ரூ. 9 லட்சத்தை மாவட்ட ஆட்சியரிடம் சங்கத்தினர் இரு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கினர். இதைத்தொடர்ந்து, இந்த ஏரியைத் தூர் வாருவதற்கு அரசுத் தரப்பில் சுமார் ரூ. 88 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் இப்பணி தொடங்கப்படவில்லை.
எனவே, கடந்த ஆண்டு இந்த ஏரியில் தூர் வாரும் பணியை ஏரி பாசனதாரர்கள் மேற்கொண்டனர்.
முழுமையாக தூர் வாராத முடியாததால் தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இந்த ஏரியைப் புனரமைக்கும் பணி வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு இன்று தொடங்கி வைத்தனர்.
இப்பணியில் 4 மதகுகள் மறு கட்டுமானமும், ஏரியைத் தூர் வாரி மணற்குன்றுகள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 92 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் வரும் வரை இப்பணி தொடரும். தண்ணீர் வந்த பிறகு பணியை நிறுத்திவிட்டு மீண்டும் அடுத்த ஆண்டு தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர். மீண்டும் அவசர சட்டம் இதனை கூறுபவர்கள் விவசாயிகள் முழுமையாக பயன்பெறும் வகையிலும் நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும் முழுமையாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

தஞ்சாவூர் மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள

Whatsapp Link- https://chat.whatsapp.com/H5EtQ8RdkDR6rDO9MCwfy3

Facebook Link – https://www.facebook.com/groups/ThanjavurNews/

MrChe #மிஸ்டர்சே


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *