திருப்பூரில் மோடிக்கு எதிராக வைகோ கருப்புக்கொடி போராட்டம்:காலணி வீசிய பாஜக பெண் தொண்டர் மீது மதிமுகவினர் தாக்குதல்

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் ரயில் நிலையம் அருகே திருப்பூர் குமரன் சிலைக்கு முன்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது. அப்போது பாஜக பெண் தொண்டர் ஒருவர் காலணி வீசியதால், மதிமுகவினர் அவரைத் தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து பகல் 2.35 மணிக்கு கோவை வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அரசு விழா நடைபெறும் இடத்துக்கு மாலை 3.05 மணிக்கு வருகிறார். திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அங்கிருந்து 100 மீ தொலைவில் அரசுவிழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் வருகையை முன்னிட்டு, திருப்பூரில் கடந்த ஒரு வாரமாக தமிழக பாஜக தலைவர்கள் முகாமிட்டு பொதுக்கூட்ட நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அவிநாசி – பெருமாநல்லூர் வரை தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்துக்காக தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் பிரம்மாண்ட பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *