10 % இட ஒதுக்கீட்டு மசோதா குறித்து பாமகவுக்கு திருமாவளவன் கேள்வி.

முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும்  மசோதா, நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது, பாமக எதிர்க்காதது ஏன்? என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக எம்.பி.க்கள் பெரும்பாலானோர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த சூழலில், மசோதா மீது மக்களவையில் பாமக எத்தகைய கருத்தைத் தெரிவிக்கப்போகிறது என பலரிடமும் எதிர்பார்ப்பு இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், மசோதாவை எதிர்த்து, பாமக எம்.பி. அன்புமணி பேசாதது ஏன்? என, திருமாவளவன் வினவியுள்ளார். 

பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்காக, சமூக நீதியைப் பலியிடுகிறார்களா? என எண்ண தோன்றுவதாகவும் திருமாவளவன் சந்தேகம் எழுப்பியுள்ளார். அரசியல் ஆதாயத்துக்காக சமூக நீதி பற்றி பாமக பேசுவது, இதன் மூலம் அம்பலமாகியிருப்பதாகவும்,இந்த நாடக அரசியலை, பிற்படுத்தப்பட்ட  மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் திருமாவளவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *