நிலுவையிலுள்ள தாமரைக்குளம் சீரமைக்கும் பணி துவங்கப்படுமா-பக்தர்கள் எதிர்பார்ப்பு!                       

Share on

தஞ்சாவூர் அடுத்து புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயில். இக்கோயில் உள்ளது. தமிழகத்தில் பிரசித்திப்பெற்ற கோயில்களில் ஒன்றாகும்.

இந்து சமய அறநிலையத்துறை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் நிர்வாகத்திற்கு உட்பட்ட கோயிலாகும்.

இக்கோயிலுக்கு தஞ்சை, திருச்சி, கோவை, அறியலூர், திருவாரூர் போன்ற பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், திருக்கோயில் அருகாமையிலுள்ள சாலியமங்கலம், அம்மாப்பேட்டை, பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்தும், வெளி மாநில, வெளி நாட்டவரும் இங்கு வாரக்கிழமைகளில் வந்து அம்மனை தரிசித்து செல்வது வழக்கம்.

இது மட்டுமின்றி சமயபுரம் மாரியம்மன் கோயில், மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில், வைத்தீஸ்வரன் கோயில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலையணிந்து யாத்திரை செல்வோர் இங்கு வந்து அம்மனை தரிசித்து பின் கோயில் பகுதியில் ஓய்வெடுத்து செல்வது வழக்கம். இப்படி எந்நேரமும் பக்தர்களில் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

மேலும் கோயில் பகுதியில் 100-க்கு மேற்பட்ட பலவித கடைகளும், திருமண மண்டபங்களும், 500-க்கு மேலான குடியிருப்பேகளும் உள்ளன. அனைவருக்கு பயனுள்ள வகையில் பொதுமக்கள் குளிக்க, துணிதுவைக்க, எழில்மிகு குளத்தின் கரைபகுதியில் அமரும் இருக்கைகள், புல்வெளியுடன் ஒளிரும் மின்விளக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் அமைத்திட அரசு திட்டத்தில் பல லட்சம்  நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த தாமரைக்குளம் சாக்கடை நிறைந்ததாகவும், கழிவறை நீர் கொண்டதாகவும், தேவையற்ற குப்பைகளை கொட்டுமிடமாகவும், ஆக மொத்தத்தில் நொய் தொற்று பரவும் அபாய குளமாய் இருந்ததை அரசு நிதியில் குளத்தை குப்பைகள், சாக்கடைகளை அப்புறப்படுத்தி தூர்வாரும் பணி நிறைவடைந்து பின் இரண்பகுதியில் சிமெண்ட்டிலான தடுப்பு சுவரும், மற்ற இரு பகுதியில் கருங்கல்லிலான அடுக்கு தடுப்பு சுவரும், படிகட்டு, குளம் ஒருபகுதியில் இரும்பு பைப் தடுப்பு என பாதியளவு பணி நடைபெற்றது.

பல ஆண்டுகளாகியும் “எழில்மிகு குளம்” அமைக்கும் பணி மீண்டும் துவங்கப்படவில்லை.

குளம் பணி நிறைவடையாததால் நீர் நிரப்ப வழியின்றி போனது. தற்போது காட்சி பொருளாக மட்டுமே உள்ளது. இதனால் பொதுமக்களும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் குளம் சீரமைக்காததை கூறி வேதனையடைகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள

Whatsapp Linkhttps://chat.whatsapp.com/H5EtQ8RdkDR6rDO9MCwfy3

Facebook Linkhttps://www.facebook.com/groups/ThanjavurNews/    


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *