‘டிக் டாக்’ செயலிக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கவேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

எங்களதுசெய்திகளைஉடனுக்குடன்உங்கள்மொபைலில்வாட்சப்மூலம்தெரிந்துகொள்ளஉடனே +919442879388 என்றஎண்ணிற்குவாட்சப்மெசேஜ்அனுப்புங்கள்..!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சில நாட்கள் முன்னர் ‘டாக் டாக்’ செயலிக்கு தடை விதித்திருந்தது. இதனை பதிவிறக்கம் செய்வதையும் தடைசெய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்குமாறு சீன நிறுவனமான ‘டிக் டாக்’ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கில், ‘டிக் டாக்’ செயலிக்கு உயர்நீதிமன்றக் கிளை விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்ற நீதிபகள் மறுத்துவிட்டனர். நாளை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தடையை நீக்க முடியாது என்று மறுத்தனர்.மேலும், இந்த வழக்கை வரும் ஏப்ரல் 22 க்கு ஒத்து வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *