https://www.mrchenews.com/wp-content/uploads/2020/06/harinew2.jpg

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக வருகிற ஜூன் 16 ஆம் தேதி, காலை 11 மணிக்கு கல்லணை திறக்கப்படும்!

Share on

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக வருகிற ஜூன் 16 ஆம் தேதி, காலை 11 மணிக்கு கல்லணை திறக்கப்படும் எனவும், சூழ்நிலைக்கேற்ப அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என்று வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு தஞ்சையில் பேட்டி

தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளை வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு இன்று ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தஞ்சை மாவட்டத்தில் 95 சதவீதம் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும் மேலும் நிலுவையில் இருக்கும் பணிகள் இன்னும் இரண்டு நாட்களில் முடிந்துவிடும் என தெரிவித்த அவர், திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை செல்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் சிறப்பான முறையில் செய்யப்படும் வருவதாகவும் தெரிவித்தார்.

இந்தாண்டு குறுவை சாகுபடி சிறப்பாக செய்வதற்கு உரம், விதை நெல் ஆகியவை தயார் நிலையில் இருப்பதாகவும், விவசாயிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். இதுவரை 344 கோடி ரூபாய் விவசாய கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் விவசாயக் கடன் கிடைப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். குறுவை சாகுபடிக்காக வருகிற ஜூன் 16ஆம் தேதி காலை 11 மணிக்கு கல்லணை திறக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். துரைகண்ணு வேளாண்மை துறை அமைச்சர் பேட்டியில் அறிவித்துள்ளார்

மிஸ்டர்சே நியூஸ் – இன்றைய தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர் மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள

http:// Whatsapp Link- https://chat.whatsapp.com/H5EtQ8RdkDR6rDO9MCwfy3 Facebook Link – https://www.facebook.com/groups/ThanjavurNews/

Facebook Link – https://www.facebook.com/groups/ThanjavurNews/


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *