2019 ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.!

Share on

2019 ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அரசு தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்  2019 தமிழ்தாய் விடுது சிகாகோ தமிழ்ச்சங்கத்திற்கும், கபிலர் விருது புலவர் வெற்றியழகனுக்கும், உவேசா விருது முனைவர் சரஸ்வதி ராமநாதன் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதே போல் சொல்லின் செல்வர் விருது கவிஞர் முனைவர் கவிதாசனுக்கும், ஜி.யு.போப் விருது மரிய ஜோசப் சேவியருக்கும், உமறுப்புலவர் விருது லியாகத் அலிகான் என்பவருக்கும் வழங்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து, முதலமைச்சர் கணினித்தமிழ் விருது முனைவர் த.நாகராசனுக்கும், மறைமலையடிகளார் விருது புலவர் முத்துக்குமாரசுவாமி ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இது தவிர சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது 10 பேருக்கும், உலக தமிழ்சங்க விருதுகள் தலா 3 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்தாய் விருது பெறும் சிகாகோ தமிழ் சங்கத்திற்கு ஐந்து லட்ச ரூபாய் பணத்துடன், நினைவுப்பரிசு, கேடயம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. மற்ற விருதுகளை பெறுவோருக்கு ஒரு லட்ச ரூபாய் பணத்துடன் நினைவுப் பரிசு, கேடயம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என அரசு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *