நெல்லை மாவட்டம் மாவடியில் தடுப்பணை சுவரை பிடித்து கொண்டு ஆபத்தான முறையில் பள்ளிக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர்.

Share on

துலுக்கர்பட்டியிலுள்ள பள்ளிக்கு செல்ல வேண்டுமென்றால் நாங்குநேரி வழியாக 15 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டும். ஆனால் நம்பியாறு வழியாக சென்றால் அரைகிலோ மீட்டர் தூரமே உள்ளது.

இதை கருதி, அந்த ஆற்றின் மீது பாலம் கட்ட ஓராண்டுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அந்த பணிகள் நடைபெறாததால், ஆற்றில் உள்ள தடுப்பணை சுவரை பிடித்துக் கொண்டு ஆபத்தான முறையில் பள்ளிக்கு மாணவர்கள் செல்கின்றனர்.

நம்பியாற்றில் தண்ணீர் அதிகரித்தால் பள்ளிக்கு சுற்றி செல்ல வேண்டிய நிலை நிலவுகிறது. இதனால் பாலத்தை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *