அதிமுக அரசு எப்போது கவிழும் என அனைவரும் காத்திருக்கின்றனர் – முக ஸ்டாலின்

சென்னை:  எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு எப்போது முடியும் என தமிழக மக்கள் அனைவரும் விரும்புவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்லாவரத்தில்  திமுக நிர்வாகி ஒருவரின் இல்லத்திருமண விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆளும் அதிமுக அரசை மத்திய அரசு தான் காப்பாற்றி வருவதாகவும், நீட் தேர்வு, இந்தி திணிப்பு போன்ற தமிழகத்தின் மாநில உரிமைகளுக்கு எதிரான எந்த ஒரு பிரச்சினைக்கும் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதி காக்கும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான இந்த அரசு எப்போது முடிவுக்கு வரும் என தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் நீண்ட நாட்களாக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

தமிழகத்தில்  நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பிருப்பதாகவும்,  பிரதமர் நரேந்திர மோடியைவெளிநாட்டு வாழ் பிரதமர் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *