ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு

இலங்கை: இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அவரை எதிர்த்து வாக்களிப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை திடீரென நீக்கிவிட்டு புதிய பிரதமராக மகிந்தா ராஜபக்சேவை நியமித்தார் இலங்கை அதிபர் சிறிசேனா. இதனையடுத்து இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. மேலும் யார் பிரதமர் என்பதில் பல்வேறு குளறுபடிகள் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *