மேலத்தானியம் அடைக்கலங்காத்தார் கோவில் ஆடி சிறப்பு வழிபாடு!

மேலத்தானியம் அடைக்கலங்காத்தார் கோவில் ஆடி சிறப்பு வழிபாடு
காரையூர், ஆக.14 –
காரையூர் அருகே உள்ள மேலத்தானியத்தில் அடைக்கலங்காத்தார் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம் அதே போல் இந்த ஆண்டும் நேற்று ஆடி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதில் அடைக்கலங்காத்தார் மற்றும் பரிவார தெய்வங்களான தொட்டிச்சி அம்மன், கொங்காணி சித்தன், சன்னாசி, பட்டாணி ஆகிய தெய்வங்களுக்கு பால், பன்னீர், பழவகைகள் என 16 வகையான சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் பக்தர்கள் பொங்கல் வைத்தும்,அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பொன்னமராாவதி தாசில்தார் பாலகிருஷ்ணன், கலந்து கொண்டார்.மேலும் மேலத்தானியம், காரையூர் சுற்றுவட்டார கிராம பக்தர்கள் கலந்து கொண்டனர்.

செய்திகளுக்காக #சதாம்ஹீசைன்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *