புதுதில்லி:மகாத்மா காந்தி நினைவிடத்தில் சோனியா, மன்மோசிங் மரியாதை!

Share on

புதுதில்லிமகாத்மா காந்தியின் 72-வது நினைவு நாளையொட்டி தில்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில்  தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும், இந்திய விடுதலைக்காகவும் போராடிய அவர், வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை அறவழியில் நடத்தினார். பாரத நாட்டிற்காக தன்னுடைய உயிரையும் காணிக்கையாக்கிய மகாத்மாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்கள் உலக சரித்திரத்தில் எழுதப்பட்ட அழியா சுவடுகள் ஆகும்.

அவர்களது தியாகத்தை நினைவுகூர்ந்து போற்றும் வகையிலும், தேசத் தந்தை மகாத்மா காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30 ஆம் தேதி, தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அவரது 72 நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி நாடு முழுவதிலும் மகாத்மா காந்தி சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. அவரது உருவப்படங்களும் ஆங்காங்கே அலங்கரித்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வகிறது.

தலைநகர் நகர் தில்லி ராஜ்காட்டில்  உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அவரது காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். 

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *