சோனியா காந்தி கலைஞர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்கிறார்

சென்னை: கலைஞர் சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு திமுக வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர்-16 அன்று திருவுருவச் சிலை அமைக்கப்பட உள்ளது. அதற்கான அழைப்பிதழை பல்வேறு தலைவர்களுக்கும் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில், சோனியா காந்தி முக.ஸ்டாலின் அவர்களுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் திமுக தலைவர் கருணாநிதி உண்மையான மண்ணின் மைந்தன் எனவும், அவரது சிலை திறப்பு விழாவில் பங்கேற்பது பெருமை அளிக்க கூடியது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் சோனியா காந்தி கலைஞர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *