https://www.mrchenews.com/wp-content/uploads/2020/09/logos-and-water-mark-1.jpg

கடையை காலி செய்ய கோரி மிரட்டுவதாக கோரி சுய உதவிக்குழு பெண்கள் புதுக்கோட்டை கலெக்டரிடம் மனு!!!

Share on

புதுக்கோட்டையில் அரசுக்கு சொந்தமான பூமாலை வணிக வளாகத்தில் உள்ள கடையில் மகளிர் சுய உதவி குழு பெண்கள் முக கவசம் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் வளாகத்தின் இணை இயக்குனர் திடீரென கடையை காலி செய்ய அடியாட்களை வைத்து மிரட்டுவதாக கோரி சுய உதவிக்குழு பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

புதுக்கோட்டையில் அரசுக்கு சொந்தமான பூமாலை வணிக வளாகம் உள்ளது. அதில் ஏராளமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்நிலையில் அதில் ஒரு கடையில் மணிக்குயில் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் சார்பாக முகக்கவசம் தயார் செய்யும் பணிக்காக கடை வாடகைக்கு விடப்பட்டது. இதில் கொரோனா காலத்தில் முகக்கவசம் தட்டுப்பாடு போக்குவதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பிலும் முக கவசம் தயாரிப்பதற்கு உத்தரவு வழங்கப்பட்டது. இதன் மூலம் முக கவசம் தயார் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து முகக்கவசம் தயாரிக்கப்படும் அந்தக் கடைக்கு மாதம் தோறும் வாடகை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திடீரென கடையை காலி செய்ய கோரி அந்த வணிக வளாகத்தின் இணை இயக்குனர் கூறியுள்ளார். இதனையடுத்து பல லட்சம் ரூபாய் முதலீடு செய்த மூலப்பொருள்கள் கடையினுள் இருந்ததால் தற்போது கடையை காலி செய்ய கால அவகாசம் கேட்டுள்ளனர். சுய உதவிக்குழு பெண்கள் ஆனால் கடையை உடனே காலி செய்ய வேண்டும் என அந்த இணை இயக்குனர் சுய உதவி பெண்களை அடியாட்கள் மூலம் மிரட்டி வருவதாக கூறி இணை இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அதேபோன்று வணிக வளாகத்தில் உள்ள கடையை காலி செய்வதற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என சுய உதவிக்குழு பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

#MrChe #மிஸ்டர்சே

புதுக்கோட்டை மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள

Whatsapp Linkhttps://chat.whatsapp.com/G80RT49BZgp2XiC1hLJ6Ca

Facebook Linkhttps://www.facebook.com/groups/PudukaiNews/

Twitter Link https://twitter.com/PudukaiNews?s=08


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *