நடிகர் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய சீமான்!

Share on

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதற்கான காரணம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் விஜயின் மாஸ்டர் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்து கொண்டிருந்த போது, திடீரென்று வருமான வரித்துறையினர், விஜயிடம் விசாரணை நடத்தினர்.

அதுமட்டுமல்லாமல் அவரை அப்படியே படப்பிடிப்பு தளத்திலிருந்து காரில் அழைத்துச் சென்று அவரது வீடுகளிலும் சோதனை நடத்தினர். இதனால் படப்பிடிப்பும் பாதியில் கைவிடப்பட்டது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் விஜய்க்கு அரசியல் ஆர்வம் இருக்கிறது.

மக்களிடம் செல்வாக்கு இருக்கிறது, அவரை அச்சப்படுத்துவதற்காக இந்த வருமான வரி சோதனை நடப்பதாக கூறியுள்ளார்.

மேலும் அவர் நடிகர் விஜயை விட, அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் இருக்கின்றார். ஜி.எஸ்.டியுடன் சேர்த்து 126 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார், அவரின் வீட்டில் ஏன் வருமான வரி துறையினர் சோதனை நடத்தவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று துவங்கிய இந்த விசாரணை தற்போது வரை தொடர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் கடந்த 2015-ஆம் ஆண்டு விஜய் வருமான வரி ஏய்ப்பு செய்ததை ஒப்புக் கொண்டதன் காரணமாக அபராம் செலுத்தியிருந்தார்.

தற்போது அவர் மீண்டும் வருமான வரி ஏய்ப்பு செய்திருந்தால், நிச்சயமாக கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *