சத்யராஜ் நடிக்கும் புதிய அரசியல் படம் – திருமுருகன் காந்தி வெளியிட்டார்

இயக்குநர் தீரன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கும் தீர்ப்புகள் விற்கப்படும் என்ற திரைப்படத்தின் போஸ்டரை மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளியிட்டுள்ளார். நடிகர் சத்யராஜ் நடித்த அமைதிப்படை என்ற அரசியல் படம் அவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான  திருப்புமுனையாக அமைந்தது. அதேபோல் சத்யராஜ் நடித்த ‘தீர்ப்புகள் திருத்தப்படலாம்’ என்ற படமும் பரபரப்பாக பேசப்பட்டது.
தீர்ப்புகள் விற்கப்படும் என்ற இந்தப் படம் அமைதிப்படை போன்று நகைச்சுவை கலந்த அரசியல் படமாக உருவாகிறதா அல்லது நடப்பு அரசியலை விமர்சிப்பதாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். படத்தின் போஸ்டரை திருமுருகன் காந்தி வெளியிட்டிருப்பது பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *