sarkar, Vijay

தெறிக்கவிட்ட ‘சர்கார்’ டீஸர்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தின் டீசர் அதிகமானோரால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

ஏ.ஆர் முருதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ளது ‘சர்கார்’ திரைப்படம். இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தீபாவளிக்கு வெளியிடப்படவுள்ள சர்கார் திரைப்படத்தின், படப்பபிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன. தற்போது, போஸ்ட் பிரொக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் இப்படத்தில் ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். அனைத்து பாடல்களையும் விவேக் எழுதியிருக்கிறார்.

சர்கார் டீசருக்காக விஜய் ரசிகர்கள் மட்டுல்லாது, திரையுலகமே காத்திருந்தது என்று தான் கூறவேண்டும். காரணம், டீசரை பார்த்தவர்களின் எண்ணிக்கையே. ஆம். சர்கார் டீசர் அக்.19-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது. டீசர் வெளியான சற்று நேரத்திலேயே, ரசிகர்கள் லட்சசக்கணக்கில் பார்த்திருந்தனர். அதாவது 10 நிமிடங்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டது. தொடர்ச்சியாக 20 நிமிடங்களுக்கு 20 லட்சத்திற்கும் மேல், 35 நிமிடங்களுக்கு 30 லட்சத்திற்கும் மேல் என சர்கார் டீசர் பார்க்கப்பட்டது.

தற்போது வரையில் அக்-20-ம் தேதி காலை 1030 மணி வரையில், ஏறத்தாழ 1.18 கோடி முறை சர்கார் டீசர் பார்க்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *