கேக்கில் மிக்ஸி, கிரைண்டர் வைத்து கொண்டாடிய `சர்கார்’ படக்குழு!

சென்னை: கேக்கில் மிக்ஸி, கிரைண்டர் வைத்து `சர்கார்’ படக்குழுவினர் வெற்றியை கொண்டாடினர்.

விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தீபாவளியன்று வெளியான ‘சர்கார் ‘ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும் ஆளும் கட்சியின் கடும் எதிர்ப்புக்கு ஆளானது. படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமலவள்ளி என்ற பெயரை படத்தின் வில்லி கதாபாத்திரத்துக்கு வைத்திருந்ததும் அரசு வழங்கிய இலவச பொருட்களை தீயில் போட்டு எரிப்பதை போலவும் காட்சிகள் வைக்கப்பட்டிருந்ததற்கு  ஆளும் அதிமுக அரசு கடும் கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியது.

பேனர்கள் கிழிப்பு, காட்சிகள் ரத்து என அ.தி.மு.கவினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இதையடுத்து, திரைப்படம் மீண்டும் தணிக்கை செய்யப்பட்டு சில காட்சிகள் நீக்கப்பட்டது. பின்னர் சர்கார் பிரச்னை சுமுகமாக முடிந்துவிட்டது.

இந்நிலையில்  விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியர் விவேக், நடிகைகள் கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி ஆகியோர் நேற்று ஒன்றாக சந்தித்துள்ளனர். இந்தப் புகைப்படங்களை ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு கேக்கின் மேலிருக்கும் மெழுகுவத்தியை ஒளியேற்றுவதுபோல் ஒரு புகைப்படத்தை ‘ Whose hand is this ?’ என்ற கேப்ஷனுடன் வெளியிட ‘தளபதி’ என்று கமென்டுகள் பறந்தன. மேலும் அந்த கேக்கில் சிறு சிறு மிக்ஸி, கிரைண்டர்களால்  அலங்காரம் செய்யப்படுத்தப்பட்டிருந்ததை மீம்ஸுகளாக போட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *