ராகுல்காந்தி சொல்வது உண்மை… பிரதமர் மோடி திருடன் தான்… சரத்குமார் பேச்சால் பரபரப்பு..!

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

பிரதமர் மோடியை திருடன் என ராகுல்காந்தி கூறியது சரிதான் என அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த போது சரத்குமார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அதிமுக கூட்டணி கட்சிக்கு ஆதரவு அளித்து  தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நெல்லைமக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியனை ஆதரித்து ஆலங்குளம், களக்காடு ஆகிய பகுதிகளில் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித்தலைவருமான சரத்குமார் வாக்கு சேகரித்தார். 

அப்போது அவர் பேசுகையில் பிரதமர் மோடி டீ விற்று முன்னேறியவர், நான் பேப்பர் விற்று முன்னேறினேன். நாட்டாமை ஆகிய நான் நியாயத்தை மட்டுமே சொல்வேன் ‘ என்று பேசினார். இந்தப் பிரசாரத்தின் போது, அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன், சரத்குமாருடன் வரவில்லை. மேலும் வருங்கால இளைய சமுதாயம் உயர வேண்டுமானால் நல்ல ஆட்சி வர வேண்டும். பிரம்மாண்ட கூட்டணி உருவானதே முதல் வெற்றி. மாறுபட்ட கருத்துகள், கொள்கைகள் இருந்தாலும் மத்தியில் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த அணி அமைந்துள்ளது.

பிரதமர் மோடி மக்களின் காவலாளி என்கிறார். ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர் காவலாளி இல்லை, திருடன் என்று சொல்கிறார். ஆமாம் மோடி திருடன் தான். மக்கள் மனதை கவர்ந்த திருடன். மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்து உங்கள் உள்ளங்களைக் கவர்ந்தவர். உங்களுக்காக உழைக்கக் காத்திருப்பவர் தான் பாரத பிரதமர் மோடி’ என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *