salem collector

மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு , கடன் பெற்று தந்த சேலம் கலெக்டர்!!!!

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியை சேர்ந்த ஷஹேனாஸ்பேகம் என்ற மாணவி  திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் ரோகிணியை சந்தித்து குடும்பத்தில் நிலவும் வறுமை காரணமாக மருத்துவ படிப்பை தொடர முடியாத நிலைமை உள்ளதாகவும், வங்கியில் கடனுதவி பெற்றுத்தருமாறு மனு கொடுத்தார்.

இதனை ஏற்ற சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி  சேலம் பேர்லேண்ட்ஸ் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி மூலம் ரூ.4 லட்சம் கடனுதவி பெறுவதற்கான அனுமதி கடிதத்தை வழங்கினார்.

இந்த மனிதநேய செயலுக்காக பொதுமக்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *