ரோஹித் சர்மா சாதனை! டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் எனும் சாதனையை எட்டியுள்ளார் ரோஹித் சர்மா. இதுவரை 92 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் 2,288 ரன்கள் எடுத்துள்ளார் .

நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் 2,272 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவரை முந்திச் சாதனை படைத்துள்ளார் ரோஹித் சர்மா. இந்திய கேப்டன் விராட் கோலி 2,167 ரன்களுடன் இப்படியலில் நான்காவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *