https://www.mrchenews.com/wp-content/uploads/2020/06/logos-and-water-mark-1-1.jpg

பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட ஆட்டோ ஓட்டுனருக்கு திமுக சார்பாக நிவாரண நிதி வழங்கப்பட்டது!!!!

Share on

Corona வைரஸ் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் தினந்தோறும் பிறப்பு நடத்தி குடும்பம் நடத்தும் தொழிலாளர்கள் ஏராளமானோர் தற்கொலை செய்து வருவது தொடர்கதையாக உள்ளது

இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரியும் சுப்பிரமணியன் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டும் வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாத துர்பாக்கிய நிலையில் இருந்ததாலும் வாங்கிய ஆட்டோவிற்கு தவணை தொகை கூட செலுத்த முடியாத நிலையில் தவித்து வந்து மன உளைச்சலில் இருந்த சுப்பிரமணியன் கடந்த சில நாட்களுக்கு முன்னால் தான் பணிபுரியும் பழைய பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டும் பகுதியில் தற்கொலை செய்து கொண்டார்

இச்சம்பவம் புதுக்கோட்டையில் ஆட்டோ ஓட்டுனர் அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்நிலையில் அக்குடும்பத்தின் சூழ்நிலையை கருத்தில் கொண்டும் அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் புதுக்கோட்டை மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் மருத்துவ அணி அமைப்பாளர் மருத்துவர் வை.முத்து ராஜா இன்று அவருடைய இல்லத்திற்கு சென்றார் சுப்பிரமணியன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த மருத்துவர் வை.முத்துராஜா முதல்கட்டமாக குடும்ப செலவுக்கு ரூபாய் 15 ஆயிரத்தை வழங்கினார்

மேலும் தற்கொலை செய்து கொண்ட சுப்பிரமணியனின் மகளுக்கு தன்னுடைய சொந்த மருத்துவமனையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் காண பணி ஆணையை வழங்கினார் மேலும் தற்கொலை செய்து கொண்ட சுப்பிரமணியனின் மகனுக்கு படிப்பு செலவு முழுவதையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும் வரக்கூடிய காலங்களில் இந்த குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தான் செய்ய இருப்பதாகவும் குடும்பத்தினரும் தெரிவித்தார்

மேலும் குடும்பத்தினரை தற்கொலை செய்து கொண்ட சுப்பிரமணியன் பணியாற்றிய பழைய பேருந்து நிலையப் பகுதிக்கு அழைத்து நிவாரண உதவி தொகையை வழங்கினார் நிவாரண நிதியை பெற்று கொண்ட குடும்பத்தினர் திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் குறிப்பாக புதுக்கோட்டை மாவட்ட மருத்துவ அணி பொறுப்பாளர்களுக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

#MrChe #மிஸ்டர்சே

புதுக்கோட்டை மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள

Whatsapp Linkhttps://chat.whatsapp.com/Fe8Xy7B6CjgKNzw5eztn6U

Facebook Link https://www.facebook.com/groups/PudukaiNews/


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *