குத்து ரம்யாவின் சர்ச்சைக்குரிய டுவீட்

டெல்லி: சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் மோடி திறந்ததை வைத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரம்யா (எ) திவ்யா ஸ்பந்தனா அவரை கிண்டல் செய்துள்ளார்.

குஜராத்தில் நிறுவப்பட்டிருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். வண்ணமயமான விழாக்களுடன் இந்த சிலை திறக்கப்பட்டது.

குஜராத்தின் நர்மதை கரையில் இது நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை ஒற்றுமைக்கான சிலை (Statue Of Unity)என்று அழைக்கப்படுகிறது. இந்த சிலைதான் உலகிலேயே மிகவும் உயரமான சிலை ஆகும்.

இந்த நிலையில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் மோடி திறந்ததை வைத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரம்யா (எ) திவ்யா ஸ்பந்தனா அவரை கிண்டல் செய்துள்ளார். திவ்யா காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவின் தலைவராக உள்ளார்.

திவ்யா தனது டிவிட்டில் ”அது என்ன பறவையின் கழிவா” என்று குறிக்கும் வகையில் ”Is that bird dropping?” என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த டிவிட் பெரிய வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பலரும் இவரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனாலும் ஒரு பிரதமரை பார்த்து இப்படியா சொல்வது என்று கேள்வி கேட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *