வாகன விபத்து இருவர் காயம் …

கீழக்கரை முக்குரோடு பகுதியில் இன்று காலை இராமநாதபுரம்-தூத்துக்குடி சென்ற கனரக வாகனம் முக்குரோடு வளைவில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.

கனரக வாகனத்தில் ஏற்றி வந்த மண் அள்ளக்கூடிய இயந்திரம் கவிழ்ந்ததில்அப்பகுதியில் நின்றிருந்த ஆட்டோ ஒன்று முழுமையாக சேதமடைந்தது. மேலும் அருகே நின்ற இருவர் காயமடைந்தனர்.

காயமடைந்த இருவரையும் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். எது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *