பிரதமர் மோடியை நேரில் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

Share on

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினர்

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தமிழகம் வருவதை ஒட்டி அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில், டெல்லி சென்றுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ஆகியோர் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் வாடும் தமிழகத்தை சேர்ந்த பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது, காவிரி- கோதாவரி நதி நீர் இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்துவது, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்ததாக கூறப்படுகிறது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *