ரஜினி கட்சி ஆரம்பித்தால் நான் விட மாட்டேன்- ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

சென்னை: ரஜினி கட்சி ஆரமிக்கமாட்டார் எனவும் ஒருவேளை ஆரம்பித்தால் வேண்டாம் என கூறுவேன் எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் “ரஜினியின் பேச்சு இரட்டை வேடம் போடுவது போல இருக்கிறது. முதல் நாள் பேசியது ரஜினியின் கருத்து.  ஆடிட்டர் குருமூர்த்தியை பார்த்துவிட்டு வந்து பேசியது  2-வது நாள் பேசியது. அவர் என்னுடைய நண்பர். எனக்கு தெரிந்து அவர் கட்சியை ஆரம்பிக்க மாட்டார். ஒருவேளை ஆரம்பித்தால் தயவு செய்து ஆரம்பிக்க வேண்டாம் என்று அவருக்கு கண்டிப்பாக அறிவுரை சொல்வேன்” என கூறினார்.

“மேலும் மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்திருப்பது தேர்தலுக்காக இல்லை. மதசார்பற்ற நாடாக இந்தியா எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காத்தான்.அதோடு நாட்டின் ஒருமைப்பாடு எப்போதுமே கெட்டு விடக்கூடாது என்ற நோக்கத்திற்காகவும்தான். மேலும் மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ளவராக கமல் இருப்பதால், அவருடன் கூட்டணி வைப்பது குறித்து ஸ்டாலினும், ராகுல்காந்தியும்தான் முடிவு செய்ய வேண்டும்.

மோடிக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்ற உண்மையை கண்டிபிடித்த தமிழிசைக்குத்தான் நோபல் பரிசு முதலில் தர வேண்டும். ஜெயலலிதா இல்லாததால் அமைச்சர்கள் ஆளாளுக்கு பேசிக் கொண்டும், ஆட்டம் பாட்டம் என கூத்தடித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.” இவ்வாறு ஈவிகேஎஸ் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *