முதல்வருடன் ரஜினி சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் நாளை திருமணம் நடைபெறுகிறது. முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்களுக்கு ரஜினிகாந்த் திருமண அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விசிக திருமாவளவன், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரது வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கி வருகிறார். இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சென்று முதல்வருக்கு அழைப்பிதழ் வழங்கினார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *