புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மே மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யக் கூடாது என அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்!

Share on

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பேருந்து பணிமனை முன்பு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நடத்திய காத்திருப்பு போராட்டத்திற்கு எல்பி எஃப் மத்திய சங்க செயலாளர் அடைக்கலம் தலைமையில் நடத்தினர்.

இதில் எல்.பி.எப்,சிஐடியு,ஏ.ஏ.எல்.எல்.எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் ஆர்.இளங்கோவன், துணை மேலாளர் ஆதப்பன்,கிளை மேலாளர் டி.இளங்கோ உள்ளிட்ட அரசுத் தரப்பு அதிகாரிகள் தொழிலாளர்கள் மத்தியில் கோரிக்கை குறித்து கேட்டறிந்து அரசிடம் எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

*புதுக்கோட்டை  மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள*

*Whatsapp Link*https://chat.whatsapp.com/HG9txUecSrHIUL7lwjHNVu

*Facebook  Link*https://www.facebook.com/groups/PudukaiNews/


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *