புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பில் கிளை நிர்வாகிகளுக்கான நல்லொழுக்கப்பயிற்சி முகாம்!

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பில் கிளை நிர்வாகிகளுக்கான நல்லொழுக்கப்பயிற்சி முகாம் மற்றும் செயற்குழு 14.04.2019 ஞாயிறு அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறந்தாங்கி பள்ளிவாசலில் நடைபெற்றது இதற்கு புதுக்கோட்டை மாவட்ட தலைவர் முபாரக்அலி அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட பெருளாளர் பதுர்ரஹ்மான்,மாவட்ட துணைத்தலைவர் முகம்மதுமீரான்,துணைச்செயலாளர்கள் ஹாரிஸ்முகம்மது,பீர் முஹம்மது,ரபீக்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலிருந்து பெருவாரியான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
இந்த தர்பியாவில் மாநில துணைத்தலைவர் அப்துல்ரஹ்மான்,மாநில பேச்சாளர்கள் அப்துன் நாஸிர்,சபீர் அலி,ஒலிமுஹம்மது,ரஹ்மதுல்லா ஆகியோர் நிர்வாகிகளுக்கு நல்லொழுக்க பயிற்சி வழங்கினர்.
மாநிலத்துனைத் தலைவர் அப்துல் ரஹ்மான் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூரும் போது கடந்த ஐந்து வருட மோடி ஆட்சியில் இந்தியா வீழ்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதை பட்டியலிட்டார்.
ஜிஎஸ்டி என்ற வரிவிதிப்பால் சிறு,குறு தொழில் செய்த வணிகர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நசுக்கப்பட்டுள்ளனர்,அனைத்து தொழிலும்

முடக்கப்பட்டுள்ளது பன மதிப்பிழப்பின் மூலம் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்கத்து மக்கள் நடுத்தெருவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் தலைவிரித்தாடுகிறது பெண்கள் வாழ தகுதியற்ற நாடாக இந்தியா மாறிவிட்டது.
வசாயம் முற்றிலும் நலிவடைந்து விவசாயிகளின் தற்கொலை அதிகரிக்க மோடியின் திறமையற்ற ஆட்சி காரனமாகிட்டது.
மோடியுடைய ஆட்சியில் நாட்டை பாதுகாக்கும் நமது நாட்டு இரானுவத்திற்கு கூட பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது
ஊழலை ஒழிக்கப்போகிறேன், கருப்பு பனத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவேன் என்று கூறிதான் மோடி ஆட்சிக்கு வந்தார் ஆனால் இதை அவர் செய்யவில்லை மாறாக ரபேல் விமான ஊழலில் மோடியே நேரடியாக சமந்தப்பட்டுள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது மேலும் வியாபம் ஊழல் போன்ற பல்வேறு ஊழல்கள் மோடியின் ஆட்சில் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு தெறிவிக்கப்பட்டுள்ளது.

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக வாக்குறுதி அளித்த மோடி அதை செய்யாமல் படித்த இளைஞர்கள் பக்கோடாவிற்கலாம் என்று அவரே கூறும் அளவிற்கு அவரது ஆட்சியின் திறமையின்மை உள்ளது.
மொத்தத்தில் மோடியின் இந்த ஐந்து ஆன்டுகால ஆட்சியில் இந்தியத்திருநாடு ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது இப்படி பல துறைகளிலும் படு தோல்வி அடைந்துவிட்ட மோடியின் மீதும் மோடியின் திறமையற்ற ஆட்சியின் மீதும் நாட்டுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் அது இந்த தேர்தல் முடிவின் மூலம் வெளிப்படும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *