தூத்துக்குடியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

Share on

தூத்துக்குடியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை (செப். 27) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் செப். 27ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி அளவில் தூத்துக்குடி ஆசிரியர் காலனி 1 ஆம் தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.

முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால், 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்போர் தங்களது சுயவிவரம் மற்றும் கல்வி சான்றுகளுடன் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *