வெளியீட்டுக்கு முன்பே ரூ. 220 கோடிக்கு வியாபாரம் ஆன தர்பார் படம்!

Share on

சர்கார் படத்தையடுத்து ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன். இசை – அனிருத். தயாரிப்பு – லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம்.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் இன்று வெளியாகியுள்ள தர்பார் படத்தின் வியாபாரம் ரூ. 220 கோடி அளவுக்கு நடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் 2.0 படத்துக்குப் பிறகு அதிகளவில் வியாபாரம் ஆன தமிழ்ப் படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் தர்பார் திரையரங்கு உரிமை ரூ. 60 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. விஜய் நடித்த பிகில் படம் தமிழ்நாட்டில் ரூ. 83 கோடிக்கு விற்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட நிலையில் ரூ. 200 கோடி பட்ஜெட்டில் உருவான தர்பார் படம் அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது.

 உலகம் முழுக்க தர்பார் படம் 7000 திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது. இந்தியாவில் 4,000 திரையரங்குகளிலும் வெளிநாட்டில் 3,000 திரையரங்குகளிலும் வெளியாகிறது. இதற்கு முன்பு ரஜினி நடித்த பேட்ட படம் உலகம் முழுக்க 3,4000 திரையரங்குகளில் வெளியானது. 

ரஜினியின் எந்திரன், கபாலி ஆகிய படங்கள் உலகளவில் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததால் இந்த விலைக்குப் பட உரிமைகள் விற்கப்பட்டுள்ளன. ரஜினி நடித்த 2.0 படம் உலகளவில் எல்லா மொழிகளிலும் சேர்த்து ரூ. 600 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

தர்பாரின் வியாபார விவரங்கள் குறித்து வெளியான தகவல்கள்:

தமிழ்நாடு – ரூ. 60 கோடி
கர்நாடகா – ரூ. 9 கோடி
கேரளா – ரூ. 6 கோடி
ஆந்திரா/தெலங்கானா – ரூ. 15 கோடி
வட இந்தியா (ஹிந்திப் பதிப்பின் அனைத்து உரிமைகளும்) – ரூ. 40 கோடி
வெளிநாடு – ரூ. 37 கோடி
சேடிலைட் மற்றும் இணைய உரிமைகள் – ரூ. 50 கோடி
ஆடியோ – ரூ. 3 கோடி
மொத்தம் – ரூ. 220 + கோடி

இதனால் தர்பார் படம் உலகளவில் ரூ. 280 கோடி அள்ளினால் மட்டுமே அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கிடைக்கும் என்று அறியப்படுகிறது. மேலும்,  பொங்கல் விடுமுறை தினங்களில் தர்பார் வெளியாகியுள்ளதால் தமிழக அளவில் விஸ்வாசம், பிகில் படங்களின் வசூலைத் தாண்டுமா என்கிற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. 

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *