பொன்னமராவதி வட்டாட்சியர் தலைமையில் மரக்கன்று நடும் விழா !

பொன்னமராவதி தாலுகா வார்பட்டு வட்டம் வேந்தன்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் பொன்னமராவதி வட்டாட்சியர் தலைமையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா வார்பட்டு வட்டம் வேந்தன்பட்டி விஏஓ அலுவலகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பொன்னமராவதி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் பொன்னமராவதி காவல் ஆய்வாளர் கருணாகரன் வார்பட்டு ஊராட்சி முன்னாள் தலைவரும் கூட்டுறவு சங்கத் தலைவருமான மலைச்சாமி முன்னிலை வகித்தார். வேந்தன்பட்டி விஏஓ அலுவலகத்தில் சுற்றுச் சுவர் கட்டப்பட்டு அதன் நினைவாக மா, பலா, வாழை, தென்னை, நாவல் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது மேலும் இதில் வேந்தன்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் விஜயகுமார் மேலைச்சிவபுரி கண்ணன், வருவாய் ஆய்வாளர் ஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியராஜ் நன்றி கூறினார்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *