பொன்னமராவதியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறனின் பிறந்த நாள் சதய விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம்

Share on

பொன்னமராவதியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறனின் 1345 வது பிறந்த நாள் சதய விழாவை முன்னிட்டு பொன்னமராவதி ஒன்றிய வீர முத்தரையர் முன்னேற்ற சங்க மாணவரணி மற்றும் இளைஞர் அணி சார்பில் வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவ மனையில் ரத்ததான முகாம் நடந்தது.

முகாமிற்கு ஒன்றிய அமைப்பாளர் கார்த்திக் தலைமைவகித்தார். தலைமை மருத்துவர் செந்தமிழ்செல்வி, அறந்தாங்கி ரத்தவங்கி மருத்துவர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ரத்தம் பெற்றனர்.

இதில் நிர்வாகிகள் பழனிச்சாமி, பழனியப்பன், அய்யாச்சாமி, மாதவன், சரத்குமார் லெட்சுமணன்,சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக பொன்னமராவதி பேரூந்து நிலையம்,வலையபட்டி அடைக்கலம்காத்தார் கோயில் ஆகிய இடங்களில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலை மற்றும்திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

செய்திகள் – கீரவாணி அழகு இளையராஜா பொன்னமராவதி


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *