பொங்கல் பண்டிகை – திருக்காட்டுப்பள்ளியில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள மண் பானைகள்!

Share on

பூதலூர்:திருக்காட்டுப்பள்ளி சந்தை பகுதியில் பொங்கல் பண்டிகையை கொண்டாட மண்பானைகள், மண்அடுப்புகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் திருநாள், அறுவடை திருநாள், தைப் பொங்கல்நாள் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு தேவையாக பொங்கல் கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சிக்கொத்து, வெல்லம், முந்திரி, திராட்சை, நெய் ஆகியவற்றின் விற்பனை நடைபெற்றுக் கொண்டுள்ளது.

திருக்காட்டுப்பள்ளி கடை வீதியில் எங்கு திரும்பினாலும் மக்கள் கைகளில் பொங்கல் பொருட்களுடன் சென்று கொண்டுள்ளனர். நாகரீகமாக பொங்கலை வெண்கல பாத்திரத்தில் கேஸ் அடுப்பில் கொண்டாடினாலும் இன்னமும் சிலர் பழமை மாறாமல் மண் அடுப்பில் மண்பானையில் பொங்கல் இடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதற்காக திருக்காட்டுப் பள்ளிசந்தை பகுதியில் பொங்கல் பானைகள் மற்றும் மண் அடுப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. சிறிய அளவின பானை ஒன்று ரூ.100 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அடுப்பும் குறைந்த அளவிலான விலை ரூ.100 ஆக உள்ளது. பானைக்கு தகுந்தவாறு விலை சொல்லப்பட்டு வருகிறது. பானை மற்றும் அடுப்பு வாங்கி அதில் பச்சரிசி மாவில் கோலமிட்டு அதில் மஞ்சள் கொத்து இஞ்சி கொத்து கட்டி மண் அடுப்பில் திறந்த வெளியில் சூரியனை பார்க்க வைத்து பொங்கலிட்டு படையலிட்டு வழிபடுவார்கள்.

இதற்காக பொங்கல் பானைகள் ரக வாரியாக வைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. பூதலூரில் நான்கு ரோடு மற்றம் உள்ள பகுதிகளில் பொங்கல் மண்பானைகள் விற்பனை நடைபெற்று வருகிறது.

திருக்காட்டுப்பள்ளியில் 2 மஞ்சள்கொத்து ரூ.30 ல் தொடங்கி விற்பனை செய்யப்படுகிறது. இஞ்சிக்கொத்து ஒன்று ரூ.20 ஆக உள்ளது. வெல்லம் உருட்டு வெல்லம் கிலோ ரூ.60 ஆகவும், அச்சு வெல்லம் ரூ. 55 லிருந்து விற்பனை செய்யப்ப்பட்டு வருகிறது.

கரும்பு ஏற்றி மினி வேன்கள் பொங்கல் பொருட்கள் வாங்கி செல்லும் இரண்டு சக்கர வாகனங்களால் திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் நேற்று அவ்வப்போது கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பின்னர் சீரானது . திருக்காட்டுப்பள்ளி சந்தையில் வாழைத்தார் விற்பனை மற்றும் ஏலம் நாள்முழுவதும் நடைபெற்றது.

இன்று திருக்காட்டுப் பள்ளியில் அதிக அளவில் மக்கள் பொங்கல் பொருட்கள் வாங்க திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *