தூத்துக்குடி ஆத்தூர் அருகே தலை துண்டித்து கொடூரக்கொலை- குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு !

Share on

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலி கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவன் மகன் சத்தியமூர்த்தி (வயது 23) தூத்துக்குடியிலுள்ள கல்லூரியில் பிகாம் 3ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

அப்பகுதியில் இளநீர் பறிக்க அடுத்த நபர் மரத்தில் ஏறியதாகவும் இதனால் இருபிரிவினருக்குள் பிரட்சனை ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து, நேற்று அப்பகுதியில் இவர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி பத்திரகாளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனிடையே அப்பகுதி மக்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உடலை எடுக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அருண் பாலகோபாலன் பேச்சுவார்த்தை நடத்தினார். குற்றவாளிகளை கைது செய்து விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

கொலை செய்யப்பட்டவரின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. துண்டிக்கப்பட்ட தலையையும், குற்றவாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர் .

ஏற்கனவே அப்பகுதியில் இருதரப்பினர் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பும், பதற்றமும் காணப்படுகிறது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

*தூத்துக்குடி மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள*

*Whatsapp Link*https://chat.whatsapp.com/JdBbco2rTVG6mi82aPI1cm

*Facebook Link*https://www.facebook.com/groups/ThootthukudiNews/


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *