நிர்மலாதேவிக்காக நிருபருடன் போலீஸ் கட்டிபிடித்து சண்டை…

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி உதவி பேராசிரியை இருந்தவர் நிர்மலாதேவி. இவர் மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.  இந்த புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து நிர்மலாதேவி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை கைது செய்தனர். இவர்களில் முருகன், கருப்பசாமிக்கு நேற்று ஜாமின் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஸ்ரீவில்லிப்புத்தூரில் கோர்ட்டில் நிர்மலாதேவியை ஆஜர்படுத்த காரில் போலீசார் அழைத்து வந்தனர்.

அப்போது நிர்மலாதேவியிடம் பத்திரிகையாளர்கள்  பேட்டி எடுக்க காரை வழிமறித்தனர். அவர்களை போலீசார் தடுத்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து நிர்மலாதேவியிடம் பேட்டி எடுக்க முடியவில்லை. இந்த சம்பவத்தில் பத்திரிகையாளர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *