ஜி-7 மாநாட்டில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

Share on

ஜி-7 மாநாட்டில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிற தலைவர்களை ஜி-7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பையும் மோடி சந்தித்தார்.

பியாரிட்ஸ்,

ஜி-7 மாநாடு பிரான்ஸ் தலைநகர் பியாரிட்சில் இன்று நடக்கிறது. ஜி-7 மாநாட்டில் இந்தியா உறுப்பினராக இல்லை. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனிபட்ட முறையில் அழைப்பு விடுத்து இருந்தார்.

உச்சிமாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். உச்சிமாநாட்டிற்கு முன் ஆயத்த பணிகளை மேற்கொள்ளும் தூதர் சுரேஷ் பிரபும் மாநாட்டில் கலந்து கொண்டார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிற தலைவர்களை ஜி-7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.

மாநாட்டுக்கு இடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பையும் மோடி சந்தித்தார்.

இருவருக்கும் இடையேயான இந்த பேச்சுவார்த்தையின்போது காஷ்மீர் விவகாரம் இடம்பெறும் என்று தெரிகிறது.

காஷ்மீரின் தற்போதைய நிலைமை மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தையில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று டிரம்ப், 2 முறை கூறி இருந்தார். இதை இந்தியா நிராகரித்து இருந்தது. காஷ்மீர் விவகாரத்தில் 3-வது நாடு தலையிட இந்தியா விரும்பவில்லை என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது.

டிரம்புடனான பேச்சுவார்த்தையின்போது மோடி தனது பதிலை ஆக்ரோசமாக வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை நேற்று இரவு சந்தித்து பேசினார். இந்த ஆண்டு ஜூலை மாதம் ஜான்சன் பிரதமரான பிறகு இருவருக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும்.

இந்தியா-இங்கிலாந்து ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் இரு தலைவர்களும் தொலைபேசி மூலம் பேசிக்கொண்டனர் ​​இதில், காஷ்மீர் பிரச்சினையை ‘சர்வதேசமயமாக்கும்’ முயற்சியாக ஆகஸ்ட் 15 ம் தேதி பாகிஸ்தானியர்களால் இந்திய தூதரகத்திற்கு வெளியே நடந்த வன்முறை போராட்ட விவகாரத்தினை மோடி எழுப்பினார்.

இங்கிலாந்து பிரதமர் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்ததோடு, இந்திய தூதரகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளார்.

காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசமயமாக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிக்கு மத்தியில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெசையும், மோடி ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேசினார். அப்போது காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தார்.

“ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெசுடனான் சந்திப்பு மிக சிறந்த சந்திப்பு. முக்கிய விஷயங்கள் குறித்து நாங்கள் விரிவான விவாதங்களை மேற்கொண்டோம், குறிப்பாக காலநிலை மாற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான வழிகள்” என்று பிரதமர் மோடி ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *