மகாசிவராத்திரி: மாதேஸ்வரன் மலைக்கு பக்தர்கள் பாத யாத்திரை!

Share on

கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் உள்ள மாதேஸ்வரன் கோவிலில் மகா சிவராத்திரி விழா நாளை இரவு கொண்டாடப்படுகிறது.

இதற்காக கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக மலைக்கோவிலுக்கு வருகிறார்கள். குறிப்பாக கனகபுரா, மாண்டியா, சாம்ராஜ்நகர், பெங்களூரு மற்றும் மாநிலம் முழுவதில் இருந்தும் பக்தர்கள் பாத யாத்திரையாக இந்த மலைக்கு வந்துள்ளனர். இவர்கள் மலை அடிவாரத்தில் உள்ள தாளபெட்டாவில் காலணிகளை கழற்றி வைத்துவிட்டு 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள மலைக்கு சென்று மாதேஸ்வரனை வழிபட்டு செல்வார்கள்.

நாளை இரவு மாதேஸ்வரனுக்கு நடக்கும் அபி ஷேகம் மற்றும் அலங்காரத்தை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வார்கள்.

சிவராத்திரி விழாவை முன்னிட்டு சேலம் மற்றும் மேட்டூரில் இருந்து நாளை முதல் 2 நாட்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *